திபெத்தில் ஒரே நாளில் ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் திகிலடைந்துள்ளனர்.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில்
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3 ரிக்டர் முதல் அதிகபட்சமாக 4.4 ரிக்டர் என பதிவானது.
கடந்த 7-ம் தேதி திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.1 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக, அமெரிக்க புவியியல் சேவை துறை தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால், சீட்டுக்கட்டுப் போல ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 126 பேர் உயிரிழந்ததாகவும், 188 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சீன அரசு கூறியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் ஒரே நாளில் ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது திபெத் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது