• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் முயற்சி 51 பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Feb 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாய முன்னணி போராட்டம் நடத்தினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் நிலையம் வந்தனர்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் ஆண்கள் 30 பேரும் பெண்கள் 21 பேரும் மொத்தம் 51 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்