• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள்.., பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Byவிஷா

Feb 1, 2023

2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை செல்லும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வெளிப்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தியை மேம்படுத்துதல், நிதித்துறையை மேம்படுத்துதல் ஆகிய 7 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கு 79,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு பயணங்களுக்காக புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிட்ரோம்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்.
ரயில்வே துறைக்கு 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், கழிவுநீர் அகற்ற மனிதர்களை தவிர்த்து 100 சதவிகிதம் இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.