உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரேன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெனான் மைன் நிறுவனம், சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள 380 அலுவலகங்களில் 2,700 பணியாளர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் தயாரிப்புகள் ஆஸ்திரேலியா, வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மால்டா, துர்க்மெனிஸ்தான், சவுதி அரேபியா, பெரு மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் விற்கப்படுகின்றன.
2022ஆம் ஆண்டு சீன பொருளாதாரம் சரிசை சந்தித்த போதிலும் இந்த ஹெனான் மைன் நிறுவனம் பெரும் லாபத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் (சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி) ஆக இருந்தது. இதனால் மகிழ்ச்சியில் திகைத்துப்போன அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு போனஸை வழங்க முடிவு செய்தது.
அதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, சிறப்பாக செயல்பட்ட 40 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 கோடியே 81 லட்சம்) மதிப்புடைய பணக்கட்டுகள் 3 மீட்டர் உயரத்திற்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் (சுமார் ரூ.6 கோடி) போனசாக வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா 1 மில்லியன் யுவான் (சுமார் ரூ.1.20 கோடி) வழங்கப்பட்டது.
இது தவிர நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2.3 பில்லியன் வரை விற்பனையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]