விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் பேர்நாயக்கன்பட்டி, கொண்டையாபுரம், சன் நகர், உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சன் நகர் பகுதியில் உள்ள குடோவனை சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக போலீசார் குடோவனை சோதனை நடத்தினர்கள். அப்போது சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் (50) ஆவுடையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (30) தாயில்பட்டி எஸ் பி எம் தெருவை சேர்ந்த முருகன (40 )மேல கோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த செல்வம் (41) சின்னகாமன்பட்டி காலனி தெருவை சேர்ந்த மகேந்திரன் (29 ) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.சோதனையில் சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட 20 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் ஐந்து பெட்டிகளில் இருந்த பேன்சி ரக வெடிகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது குறித்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டனர்.