• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இருந்து 5 பேர் நீக்கம்.. துரைமுருகன் அதிரடி

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.