• Wed. Jan 22nd, 2025

சுற்றுப்பயணத்திலும் தலைவர்களுடன் சந்திப்பு…புறப்பட்டார் சசிகலா

Byகாயத்ரி

Mar 17, 2022

சசிகலா மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கி இருந்த சசிகலா அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்தார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது சசிகலா 2-ஆம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.