• Wed. Apr 24th, 2024

பிச்சிவளை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற 5 பேர் திடீர் ராஜினாமா..!

Byவிஷா

Oct 22, 2021

திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்களில் 5 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில்;, 1 மற்றும் 4 வது வார்டுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 2,3,5,6 ஆகிய நான்கு வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்கு நடந்த தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர் இப்பகுதியில் 566 வாக்காளர்கள் உள்ள நிலையில், 282 பேர் மட்டுமே வாக்களித்தனர்.


இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிச்சிவிளை பகுதியில் 1 வது வார்டுக்கு வைகுண்ட செல்வியும், 4 வது வார்டுக்கு சுஜாதாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் பிச்சிவிளை சாமுவேல் நகர் 2வது வார்டுக்கு கேசவன, வடக்கு தெரு 3 வது வார்டு பதவிக்கு நடராஜன் காமராஜர் தெரு 5 வது வார்டுக்கு யாக்கோப் புது கிணறு 6 வது வார்டு பதவிக்கு பரிமளசெல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி பிச்சிவிளையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு 6 வது வார்டில் வெற்றி பெற்ற பரிமளசெல்வி வரவில்லை. மீதமுள்ள 5 வார்டுகள் உறுப்பினர் பதவியேற்றனர். இந்நிலையில் உறுப்பினர்களாக பதவியேற்ற ஐந்து பேரும் இன்று திடீரென ராஜினாமா செய்ததால் பெரும்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பரிமளசெல்வி என்பவர் பதிவு ஏற்கவும் இல்லை ராஜினமா செய்யவும் வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *