

தமிழகம் முழவதும் போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆஅணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மதுரை கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர்,ஈரோடு,நெல்லை,சேலம் உள்ளிட்ட இடங்களில் போலி வங்கிகள் செயல்பட்டன. ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு வாங்கி போலியான வங்கியின் டெபிட் கார்டாக கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ56 லட்சத்தை முடக்கியுள்ளோம் என்றார்.
