காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்
தெரிவித்துள்ளதாவது: ராகுல் காந்தியை எங்கே, காணவில்லை? அவர் பாதயாத்திரையில் இருக்கிறார், ஆனால் இமாச்சல மாநிலம் குறித்து ஏன் இவ்வளவு அலட்சியம். காங்கிரசின் திறமையான தலைமை ஏன் இமாச்சல் (தேர்தல்) மீது இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது தேர்தல் பிரச்சாரம் ஓரிரு நாட்களில் முடிவடையும், ஆனால் ராகுலையும் அவரது தாயாரையும் (சோனியா காந்தி) இங்கு காணவில்லை. தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் ராகுல்காந்தி இருக்கிறார். அதனால் இங்கு வராமல் தவிர்க்கிறார் என்றார்.