இந்தோனேசியாவின் சுலோவேஸித் தீவில் காணப்படுகிற குகை ஓவியங்களை ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்சிம் ஆல்பர்ட், இந்த மரோஸ் குகையில் ஒரு பன்றியின் உருவம் பொறித்த ஓவியங்களு;கு குறைந்தது 45500 ஆண்டுகள் வயதிருக்கும் என கணித்து கூறினார். பொதுவாக இந்தோனேசிய குகை ஓவியங்கள் சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றே கணித்திருந்தனர். இந்த ஓவியங்கள் குறித்து பழனியிலுள்ள தொல்லியலாளர் நாராயணமூர்த்தி கூறும் போது உலகின் மூத்த குகை ஓவியமாக இந்தோனேசிய ஓவியத்தை சொல்கிறார்கள். இந்த ஓவியத்தில் உள்ள பூஞ்சையை கார்பன் டேட்டிங் செய்ததில் அந்த பூஞ்சையின் பயதைத்தான் 45500 ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டது. அப்படி என்றால் ஓவியத்தின் வயது இன்னும் பல ஆண்டுகள் பின்னே செல்லும்..
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி கணக்கன்பட்டி. அருகேயுள்ள புறாக்கூடு பாப்பம்பட்டி. உள்ளிட்ட பல பகுதிகளில் குகை ஓவியங்கள் உள்ளன. ஆனால் இந்தோனோசிய ஓவியத்தோடு இதனை ஒப்பிட முடியாது. இன்றைக்கு உலகின் மூத்த குகை ஓவியமாக விளங்குகிறது. இதனை எப்படி பாதுகாப்பது என்று இந்தோனிய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல நமது மாநிலத்தில் உள்ள ஓவியங்களையும் பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என்று நாராயணமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்
45 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்தோனேசியா பாறை ஓவியம்…..
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2021/07/add0c729-6007-4791-a01a-46438b420781.jpg)