• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விஏஓ வீட்டில் 42 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..,

ByS.Ariyanayagam

Feb 19, 2026

நிலக்கோட்டையில் பட்டப் பகலில் VAO வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி (திங்கட்கிழமை) பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 42 பவுன் தங்க நகையை திருடி சென்றது தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில், நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சத்யபிரபா தலைமையில் நிலக்கோட்டை குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் அழகர்சாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் காவலர்கள் கார்த்திக்,முருகன், லெனின், ஜெகதீசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராஜபாளையத்தை சேர்ந்த புளுகாண்டி மகன் மணிசங்கர்(26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 42 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.