• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள்..,

ByR.Arunprasanth

May 10, 2025

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மன்னார் வெளிக்கடை சிறையில் அடைத்தனர்.

தகவல் அறிந்து மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் நான்கு மீனவர்களையும் இலங்கை அரசு ஏப்ரல் 25 ம் தேதி விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து 14 நாட்கள் மரியானா முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு அவசர கால கடவு சீட்டுகள் வழங்கி ஏர் இந்தியா விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த நான்கு மீனவர்களையும் குடியுரிமை சோதனை முடித்து பின் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். வெளியே வந்த மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று தனி வாகனம் மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.