• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 38மனுக்களுக்கு தீர்வு

ByG.Suresh

Feb 21, 2024

சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின் பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் ஆகியோர் தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமை மனு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன் அடிப்படையில் இன்று பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 38மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல்துணைக் கண்
காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.