• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் நகரதந்தை முன்னாள் பேரூராட்சிதலைவர் S.S.சோனைபிள்ளை 37 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மரியாதை…

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தானின் நகரத் தந்தையும் பேரூராட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் அதிமுக தொகுதி செயலாளருமான சோனைப்பிள்ளையின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் சோழவந்தான் தெற்கு ரத வீதில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது பெருமைகள் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ M.மாணிக்கம் பேரூர் செயலாளர் V.முருகேசன் வரவேற்றனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி ராஜா. மாநில அம்மா பேரவை துரை தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர் சண்முக பாண்டிய ராஜா, கேபிள் மணி ,பேரூர் துணைச் செயலாளர் தியாகு, தகவல் தொழில் நுட்ப அணி பிரேம் எஸ் எம் டி நாகராஜ், வார்டு செயலாளர் மணி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி மாவட்ட துணை செயலாளர் சோழவந்தான் SSM.சிவா நன்றி கூறினார்.