• Sat. May 4th, 2024

மதுரையில் வியாபாரிகளுக்கு தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்…

Byகுமார்

Jan 7, 2024

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை பாதுகாக்க, தனி சிறப்பு சட்டம் கொண்டு வர, வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, மாநில செயலாளர் குட்டி(என்ற)அந்தோனிராஜ், வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மாமூல் கேட்கும் ரவுடிகளிலிருந்து வியாபாரிகளை பாதுகாக்க தனி சிறப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது..,

ரவுடிகளால் கொலை செய்யப்பட்ட வினோத்குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், வணிகவரி அதிகாரியின் அடாவடித்தனத்திலிருந்து வியாபாரிகளை பாதுகாக்கவும், அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கை கண்டித்தும், வியாபாரிகளை மிரட்டும் சமூக விரோதிகளிடம் இருந்து காவல்துறை பாதுகாப்பு தரும் படியும் வியாபாரிகளை பாதுகாக்க தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *