• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ஓதுக்கீடு

Byகாயத்ரி

Dec 16, 2021

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.


இந்த தொகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.


இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021- 2022ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% விடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.