• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்குமா?

வடதமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர்கள் பல போராட்டங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் உதவியால் 108 சாதிகளுடன் சேர்த்து இதற்கு முன்னர் 20 இட ஒதுக்கீடு கிடைத்தது.


இதற்கு வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கடந்த ஆட்சியில் வன்னியர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.


கடந்த அதிமுக ஆட்சியில் 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்தார். தற்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியது.


10.5% உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை தடை விதிக்க கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரிக்க உள்ளது. ஒதுக்கீடு தொடர்பான மனுக்களை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதுகுறித்து இன்று தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.