• Thu. May 9th, 2024

நஞ்சப்பசத்திர கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2.50 கோடி நிதி – தமிழக அரசு

Byமதி

Dec 16, 2021

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திர கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள இரண்டரை கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் நேற்று உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணையை ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், தமிழக அரசு அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *