

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல்
சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமை வருவதால் சனி,ஞாயிறு ,திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி படிக்கும்,பணிபுரியும் மக்கள் பலரும் இன்று தங்கள் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் பலமுறை எச்சரித்தும் ஒவ்வொரு பண்டிகை தினத்தின் போது இது தொடர்கதையாகி வருகிறது.