• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Byதரணி

Mar 20, 2024

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர் அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடைகிறது.

மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி காலை 9:15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு திருவண்ணாமலையை 10:45 மணிக்கு வந்து அடையும்.