• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

Byவிஷா

Dec 21, 2023

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி திங்களன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகளுக்கும் விடுமுறை தான். இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சரியான நேரமாக இருக்கும். இந்த விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. எனவே அனைவரும் தொடர் விடுமுறையை கொண்டாடி மகிழுங்கள்.