சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் முதல் முறையாக காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவிவிட்டது. இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிற நிலை வந்த பின், தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதே சமயத்தில் உருமாறிய புது கொரோனா வைரஸ்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக விவாதிக்க 2வது கொரோனா உச்சிமாநாடு இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அழைப்பின் படி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இம்மாநாட்டின் தொடக்கத்தில் “தொற்றுநோய் சோர்வினைத் தடுத்தல் மற்றும் தயார்நிலையில் முன்னுரிமை அளித்தல்” எனும் தலைப்பில் நடைபெறும் அமர்வில் பிரதமர் பேசுகிறார். இதில் தொடக்க அமர்வு மாலை 6:30 மணி முதல் 7:45 மணிவரை நேரடியாக ஒளிபரப்பாகிறது. சென்ற வருடம் செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடத்திய உலகளாவிய முதல் கொரோனா உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் பல முக்கியமான தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக உலகளாவியபோரில் மலிவுவிலையில் தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான குறைந்த கட்டணம், உள்நாட்டுதொழில் நுட்பங்களை உருவாக்குதல், மரபணு கண்காணிப்பு, சுகாதார பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு என பல்வேறு விதங்களில் இந்தியா முக்கிய பங்களிப்பை செய்து வருவது கவனிக்கத்தக்கது.