• Mon. Apr 21st, 2025

பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா

BySeenu

Jan 30, 2025

பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ,பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 27 வது விளக்கேற்றும் விழா செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

2024-2025 ஆம் ஆண்டு சேர்ந்த முதலாம் ஆண்டு பட்டபடிப்பு மற்றும் பட்டயபடிப்பு பயிலும் செவிலியர் மாணவர்களுக்கு மருத்துவமனை பயிற்சிக்கு செல்வதற்கு முன் செவிலியத் துறையின் முன்னோடியான “ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூர்ந்து உறுதி மொழி மற்றும் விளக்கேற்றும் விழாவாக நடைபெற்ற இதில், 19 பட்டயபடிப்பு 100 பட்டப்படிப்பு மாணவர்கள் விளக்கெற்றி உறுதிமொழி எடுத்தனர்.

முன்னதாக விழாவில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையுரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத பாகமாக செவிலியர்கள் இருப்பதாக கூறிய அவர்,தற்போது செவிலியர் துறைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்..

செவிலியர் பணிக்கு செல்லும் இளம் தலைமுறையினர் செவிலிய பணியின் உன்னதமான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என அவர் குறிப்பிட்டார். விழாவின் சிறப்பு விருந்தினரான மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பாலுசாமி மாணவ,மாணவிகளுக்கு தனது வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டார். கவுரவ அழைப்பாளராக மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர், டாக்டர். இவன் மோசஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

இன்றைய இளம் மாணவ,மாணவிகள் நமது இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்ட அவர்,இன்றளவும் தமிழகத்தில் அவர் நினைவில் செயல்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு மற்றும் அறங்காவலர்கள் டாக்டர். ஸ்வேதா டாக்டர். பூபாலா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். லிங்கராஜ் சித்ரா,துணை முதல்வர்கள் கலைவாணி, ஜெயபாரதி உட்பட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.