• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடிகை சினேகாவிடம் 26 லட்சம் மோசடி..!

Byமதி

Nov 18, 2021

கடந்த 2000 ஆண்டு காலகட்டங்களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சினேகா, சென்னையை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசினர்.

26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்தும் வழங்கினேன். முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகையை கேட்டபோது அதை தர மறுத்து என்னை மிரட்டுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.பண மோசடி தொடர்பாக சினேகாவின் புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.