நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 25புதிய பேருந்து சேவை துவக்கம் .
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் இன்று வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மேயர் மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா உட்பட பலர் பங்கேற்றனர்.