நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றனர்.
முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி,

2023 – 2024 ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலாவாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழக அரசு வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது.
இந்த நிலையில் இந்த பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்கள் 13 மாணவிகள் மொத்தம் 22 மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலாவிற்காக ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டனர்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ மாணவிகள் சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும்,
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் அது மட்டும் இன்றி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை இதுபோன்று அழைத்துச் செல்வது ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் பல்வேறு நாடுகளுக்கு செல்வதன் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும் முதல் முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு பள்ளி மாணவ மாணவிகளும் சாதிக்க முடியும் என மன உறுதி தருவதாகவும் தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)