• Sat. Feb 15th, 2025

பொங்கல் விழாவில் 2008 பானைகளில் வெண் பொங்கல்…

கலப்பை இயக்கத்தின் சார்பில் 11_ வது ஆண்டு பொங்கல் விழாவில் 2008 பானைகளில் பொங்கிய வெண் பொங்கல். கலப்பை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், பி.டி.செல்லக்குமார் தலைமையில், கலப்பை அமைப்பின் 11-வது ஆண்டின் பொங்கல் விழா அஞ்சுகிராமத்தை அடுத்த கடற்கரை பகுதியான ரஸ்த்தா காட்டில், 2008_புதிய சில்வர் பானையில் பெண்கள் குலவை இட்டு பொங்கலை கொண்டாடினார்கள்.

அலைகளில் வெண்நிரத்தில் கரை நோக்கி நீந்தி வந்த கடல் நுறைகள் அதிகமா, ?இல்லை, இல்லை பொங்கல் பானையில் பொங்கி வடிந்த வெண் நுறைகள் தான் அதிகம் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தக்கூடிய நிலையில் கண்கள் முன் விரிந்த அற்புதமான காட்சி.

பி.டி.செல்வகுமார் தலைமையில் நடந்த விழாவில் பொங்கல் இட்டு மகிழ்ந்த அன்னையர் குலத்தையும். கடற்கரை பொங்கலை காண வந்த மக்களுடன். பி.டி.செல்வகுமாரின் அழைப்பினை ஏற்று பொங்கல் விழாவில் பங்கேற்ற 20_க்கும் அதிகமான அமெரிக்காவை சேர்ந்த விருந்தினர்கள் வருகையும், பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சாமி தோப்பு அய்யாவழியின் தலைமை பதியை சேர்ந்த பூஜித குரு பாலபிராஜதிபதி அடிகளார். திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், சுவாமி பொன்.காமராஜ் மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்ற பொங்கல் விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம்,சிலம்பம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா நிகழ்வில் அமெரிக்கா விருந்தினர் களை தலைமை ஏற்று அழைத்து வந்த குழுவின் தலைவருக்கு, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், பூஜித குரு பாலபிராஜதிபதி, கலப்பை அமைப்பின் தலைவர் பி.டி. செல்வகுமார் என மூவரும் இணைந்து நூனைவு பரிசு வழங்கினார். அத்துடன் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைத்து கலைஞர்களுக்கும், மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் நினைவு பரிசு வழங்கினார்.