சென்னை மாகாண கலெக்டராக 1810ம் ஆணடு பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஒயிட் என்னீஸ். இவர் கிறிஸ்துவமத போதகராகவும் உள்ளார். திருக்குறளை முழுயைமாக தொகுத்ததில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது. இவருடைய கல்லறை திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் புரத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து மதுரை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் மேற்பார்வையில் ஆணையர் சிவசுப்ரமணியன் தலைமையில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஒயிட் என்னீஸ் கல்லறையை தேடினர். 50க்கும் மேற்பட்ட கல்லறைகளில் அவரது கல்லறை கிடைக்கவில்லை. இதனால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த கல்லறை கிறிஸ்துவ மிசனரி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக்கிடக்கிறது.