TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.