• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது..!!

Byகாயத்ரி

Aug 16, 2022

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.