• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

1947 ஆகஸ்ட் 16’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது..!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இந்திய சுதந்திர தினமான இன்றைக்கு வெளியிடப்பட்டது.

Purple Bull Entertainment வழங்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை A.R.Murugadoss Production நிறுவனத்தின் சார்பில், A.R.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நரேஷ் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஆதித்யா ஜோஷி இணை தயாரிப்பு செய்துள்ளார்.

கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகையான ரேவதியின் நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன், பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் புகழ்மிக்க கதையை இப்படம் சொல்கிறது.

இந்த ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படம் குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இப்போது, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தின் புனிதமான மற்றும் பிரம்மாண்டமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் இறுதியாக இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளனர்.

டிராமா, காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த டீஸர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.”