முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட நத்தம் தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 6வது முறையாக நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார்.

ஒரு 99 இடை தேர்தலில் நத்தம் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்பு 2001,2006,2011,2021 ஆகிய ஆண்டுகள் வெற்றி பெற்றார். தற்போது ஆறாவது முறையாக தனது வேப்பு முடிவை நத்தம் தொகுதியில் தாக்கல் செய்துள்ளார். நத்தம் சட்டமன்றத் தொகுதியில்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சனிக்கிழமை மட்டும் 19 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் கே.செல்வகுமார், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எல்.என்.ரமேஷ் உள்பட பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி , வெற்றி தமிழர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 13 பேர் உள்பட சனிக்கிழமை மட்டும் 19 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டீன் சாந்தப்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அப்பொழுது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாண்டியராஜன் உடனிருந்தார்.

1.நத்தம் வட்டாட்சியர்
அலுவலகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் கே.செல்வகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
2..நத்தம் வட்டாட்சியர்
அலுவலகத்தில்
அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
3..நத்தம் வட்டாட்சியர்
அலுவலகத்தில்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எல்.என்.ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.



