• Mon. Apr 28th, 2025

ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகள் தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Apr 13, 2025

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 க்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண்.3 மிளகரணை பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், வார்டு எண்.19 கூடல்புதூர் பகுதியில் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம், வார்டு எண்.3 ஆனையூர் பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம், வார்டு எண்.18 சாஸ்தா நகர் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், வார்டு எண்.4 பட்டிமேடு மெயின் ரோடு பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், வார்டு எண்.17 எஸ்.ஆலங்குளம் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், வார்டு எண்.17 எஸ்.ஆலங்குளம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டி, வார்டு எண்.7 விஸ்வநாதநகர் மெயின் ரோடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள சமுதாய கூடம் கட்டிடம், வார்டு எண்.6 உச்சபரம்புமேடு பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடம், வார்டு எண்.5 நாகனாகுளம் மெயின் ரோடு பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடம், வார்டு எண்.8 கண்ண னேந்தல் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடங்கள் மற்றும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டு எண்.19 கூடல்புதூர் பி.எஸ்என்.எல். மெயின் ரோடு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம், வார்டு எண்.17 மகாத்மா காந்தி நகர் மெயின் ரோடு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம், வார்டு எண்.6 இ.பி.காலனி பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.136.80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

மேலும் மண்டலம் 1 வார்டு எண்.6, 7 மற்றும் 8 உச்சபரம்புமேடு மற்றும் கண்ணனேந்தல் மெயின் ரோடு பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.148 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.79 ஜீவா நகர் 1வது மெயின் சாலை, ஜீவா நகர் விரிவாக்கம், இராமையா மெயின் சாலை ஆகிய தெருக்களில் 2490 மீட்டர் நீளத்திற்கு ரூ.168 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.78 சேசு மகால் ரோடு, மீனாம்பிகை நகர் மெயின் சாலை ஆகிய தெருக்களில் 591 மீட்டர் நீளத்திற்கு ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.78 பாலாஜி நகர் விரிவாக்கம், கோவலன் நகர் பிரதான சாலை, நன்மை நகர், சோனையா கோவில் குறுக்குத் தெரு, தென்றல் நகல் 1வது குறுக்குத் தெரு, சோனையர் கோவில் தெரு, சந்தானம் நகர் 2வது குறுக்குத் தெரு, சந்தானம் நகர் 3வது குறுக்குத் தெரு, சந்தானம் நகர் 4வது குறுக்குத் தெரு, சந்தானம் நகர் 5வது குறுக்குத் தெரு மற்றும் ரமணஸ்ரீ கார்டன் 1வது தெரு ஆகிய தெருக்களில் 1912.50 மீட்டர் நீளத்திற்கு ரூ.129 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.73 டி.வி.எஸ்.நகர் கிருஷ்ணா ரோடு, முத்துப்பட்டி மெயின் ரோடு ஆகிய தெருக்களில் 1005 மீட்டர் நீளத்திற்கு ரூ.51 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.72 சந்தன முருகன் நகர் மெயின் மற்றும் குறுக்குச் சாலைகள், குரு வித்யாலயா பள்ளி சாலை, சாரதா அம்மாள் தெரு, இ.பி.காலனி 1வது, 2வது தெருக்கள், விவேகானந்தா 1வது, 2வது தெருக்களில் 2094 மீட்டர் நீளத்திற்கு ரூ.150 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.71, 72 மற்றும் 74 வி.கே.பி.நகர் மெயின் மற்றும் குறுக்குத் தெருக்கள், ஐ.ஓ.பி.காலனி, வைகை வீதி, நீலகண்டன் கோவில் தெரு, பசும்பொன்நகர், காளியம்மன் கோவில் ஆகிய தெருக்களில் 2365 மீட்டர் நீளத்திற்கு ரூ.167 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.711.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சுவிதா, உதவி ஆணையாளர்கள் மணியன், பார்த்தசாரதி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி, நந்தினி, பால்செல்வி, ராதிகா, இராமமூர்த்தி, ரோகினி, நவநீத கிருஷ்ணன், திரு.பாபு, லஷிகாஸ்ரீ, தமிழ்ச்செல்வி, முனியாண்டி, கருப்பசாமி, போஸ், திரு.சுதன், அமுதா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.