• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேறியது

ByA.Tamilselvan

Jul 11, 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தொடங்கியதும், அங்கிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதலில், செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ஜெயலலிதா அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ரத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதற்காகவும், சட்டம் ஒழுங்கை காக்க தவறியதற்காகவும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய – மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல், இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல், நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய – மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.
கட்சி அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல், அண்ணா, பெரியார், ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்சி பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது, கட்சி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது, கட்சி இடைக்கால பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள கட்சி பொதுக்குழுவை தேர்வு செய்ய வேண்டுதல், கட்சி பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது