ஆட்சியைப் பிடிக்க 4 மாதம் விரதம் தொடங்கியுள்ளார் நடிகர் பவன் கல்யாண்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம் விரதம் இருக்கும் அவர் சூரியன் அஸ்தமான நேரத்திற்கு பிறகு மட்டும் ஒரு வேளை உணவை சாப்பிடுகிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெகன்மோகன் ரெட்டி திணறி வருகிறார். ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள். நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாததால் மக்கள் கூட்டம் ஜனசேனா கட்சியை நாடி வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை ஜனசேனா கட்சி கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.