விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார்.

அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து அதிமுக வேட்பாளர்களை வேன்று சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணியாற்றினார் நான்காவது முறையாக இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட்டணி கட்சி தொண்டர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதே போல் தமிழக வெற்றி கழகம் சார்பில் தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் சசிகலா புதிதாக ஆரம்பித்துள்ள அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஹரிஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.




