விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக காரியாபட்டி ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் MSR.ராஜவர்மன் , தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்பி நிறைகுலம்த்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் MSR.ராஜவர்மன் கூறியதாவது
தொகுதிகளில் மக்களின் குறைகள் என்னவாக உள்ளது என்ற கேள்விக்கு
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை , பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு.

ஏற்கனவே 585 தேர்தல் அறிக்கையில் எத்தனை தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றி இருக்கிறார்கள் மக்களுக்குத் தெரியும். இப்பயும் ஒரு புதிய தேர்தல் அறிக்கையை உருவாக்கி இன்னும் மக்களிடம் பொய்யை மட்டும் சொல்லி எவ்வளவு நாள் ஆட்சியை நடத்த முடியும் இன்றைக்கு தமிழகத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் நான்கு ஆண்டுகால ஆட்சியின் செய்த சாதனைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இருப்பவர்கள் ஸ்டாலின் அவர்கள் அந்தத் திட்டத்தைஎல்லாம் முடக்கியது தான் அவர்களுடைய இந்த ஆட்சியினுடைய பெருமை.
அதிமுக திமுக 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளர்கள் நிறுத்தி உள்ளீர்கள் – TVK விஜய் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது பற்றிய கேள்விக்கு
234 தொகுதிகளிலும் களமே இல்லாமல் போய்விடும் – ஏதோ மீடியாக்கள் டி வி கே , டிவி கே என்று புஷ்பண்ணிட்டு இருக்கீங்க மக்களிடம் தென் மாவட்ட மக்களிடம் TVK என்பது என்னவென்று தெரியாது . TVK என்ன இருக்கு கொரோனா நேரத்தில் வந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தாரா , இல்லை நடிகர் சங்கத்திற்கு பலாயிரம் கோடியை கொடுத்து உதவினாரா , தமிழ்நாட்டு மக்களுக்கு , ஊனமுற்றோர்கள் , புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் மருத்துவமனையின் அமைத்தாரா , என்ன செய்தார் நீங்களே TVK , TVK என்று நீங்களா வந்து புஸ் பண்றீங்க மக்கள் மத்தியில் அதெல்லாம் எடுபடாது.
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் நரிக்குடி பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு
கண்டிப்பாக எடப்பாடியார் ஆட்சி அமைந்த உடன் நரிக்குடியை தனி தாலுகாவாக நிறைவேற்றி தரப்படும் .
திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு
இந்த முறை இந்த திருச்சுழி சட்டமன்ற தொகுதி ஒரு மாற்றம் வேண்டும் மேலும் இந்த தொகுதி ஏற்றம் பெற வேண்டும் என்ற முடிவெடுத்து விட்டார்கள். ஆனால் இந்த தொகுதி 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அண்ணா திமுக வெற்றி பெறுவது உறுதி இதனை யாராலும் தடுக்க முடியாது .
வெளியூரிலிருந்து திருச்சுழி தொகுதிக்கு வந்துள்ளீர்கள் – தொகுதியில் தங்குவதற்கு குறித்த கேள்விக்கு
நான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்துதான் வந்து உள்ளேன் தனித் தீவில் இருந்து வரவில்லை . ஆந்திராவில் இருந்து பொட்டணம் கட்டி வந்தால் தான் வெளியூர் என்று அர்த்தம் . நான் வெற்றி பெற்றவுடன் இந்த தொகுதி மக்களுடன் காரியாபட்டியில் குடியிருப்பேன் .
இந்த தொகுதியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான குறித்த கேள்விக்கு
எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் சட்டப்பேரவை உறுப்பினராகவும் , எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் வந்தவுடன் இந்த பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலை கொண்டு வருவேன் ஏழைகளிலேயே மக்கள் படித்தவர்கள் பயன்படுகின்ற வகையில் நரிக்குடி பகுதியை மையமாக கொண்டு ஒரு தொழிற்சாலையும், காரியாபட்டியை மையமாக வைத்து ஒரு தொழிற்சாலையும் , திருச்சுழியை மையமாக வைத்து ஒரு தொழிற்சாலையும், மேலும் இந்த பகுதியில் ஒரு சட்டக் கல்லூரியை முன்னோர்களுக்கு நான் அயராது உழைப்பேன் ,
முதலமைச்சராக எடப்பாடியார் வந்தவுடன் பாலைவனமாக உள்ள இந்த திருச்சுழி சட்டமன்ற தொகுதி சோலைவனமாக மாற்றுவேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.




