• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தென் கொரியா ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி

ByA.Tamilselvan

Oct 30, 2022

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அதனால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத ஹாலோவீன் கூட்டம் என்பதால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் அதில் சிக்கிய மக்களில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோலில் ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.