புளியந்தோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் போன் மூலம் அறிமுகமாகியுள்ளார். அச்சிறுமியிடம் அசோக்குமார் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னையில் பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேற்படி சம்பவம் குறித்து, அச்சிறுமியின் தாயார் கடந்த 12ம் தேதி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தேப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அசோக்குமார் (25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.