• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா “டைனமிக்ஸ் 2023”..,

BySeenu

Nov 3, 2023

கோவையில் உள்ள தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (ISRO) துணை இயக்குனர்- ஆப்பிரேஷன்ஸ், விஞ்ஞானி அமித்குமார் சிங் பங்கேற்று சிறப்பித்தார்.

அவர் பேசுகையில், இந்தியாவின் விண்வெளி சிறப்பம்சங்கள், விண்வெளி துறையில் ஏற்பட்ட அனுபவங்கள், இந்த துறையில் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள், வாய்ப்புகள், அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

கடந்த 2022 – 23ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள், முன்னிலை பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி நிறுவனத்தின் தலைவர் என்.அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் பூனம் சியல் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாடகங்கள் மற்றும் நடனங்கள் பல்வேறு வகையான கருத்துக்களில் இடம் பெற்றன. சர்வதேச அளவிலான சந்திராயன் திட்ட திட்ட நினைவேந்தல், விவசாயிகளை மீட்கும் முறைகள், நவீன கால நடனங்கள், நாட்டிய நாடகங்கள், ஜோக்கர் அன்ட் ஹார்லி குயின் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.

நடந்த நிகழ்வில், மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி ஆராவரத்துடன் கலந்து கொண்டனர்.