• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

12 வருஷமாச்சு – சமந்தாவின் இணைய பகிர்வு!

நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷனான Ye Maaya Chesave என கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும், தமிழில் உதவி இயக்குநர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்!

சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகளை கடந்தும் தனது மார்க்கெட்டை சரியாக பார்த்துக்கொண்டுள்ளனர்! அதில் ஒருவர் தான், நடிகை சமந்தா!

இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12வது ஆண்டை நிறைவு செய்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார், நடிகை சமந்தா.

இது குறித்து, ‘இன்றுடன் நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் எனக்கு சிறந்த தருணமாக இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம் என நடிகை சமந்தா நெகிழ்ச்சியாக பதிவிட்டு அட்டகாசமான ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள், மேலும், பல சாதனைகளை படைக்க வேண்டும் சமந்தா என வாழ்த்தி வருகின்றனர்.

தெலுங்கில் சகுந்தலம் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. யசோதா திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ள சமந்தா இந்தியிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச திரைப்படமான Arrangements of Love எனும் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.