• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மாணவிகளுக்கு திமுக சார்பில் பேனா பென்சில் அடங்கிய தொகுப்பு..,

BySeenu

Feb 26, 2026

தமிழ்நாடு அரசு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில் மாணவ மாணவிகள் அதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திமுக வெங்கடாபுரம் பகுதி கழகத்தின் சார்பில் கமலநாதன் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் அடங்கிய தொகுப்பை வெங்கடாபுரம் பகுதி கழகத்தின் பொருப்பாளர் சிவராமன் தலைமையில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வெங்கடாபுரம் பகுதி கழகத்தின் பொறுப்பாளர் சிவராமன் தலைமையில் வட்டக் கழக பொறுப்பாளர்கள் சிவபாலன் ஷாம் ஜெயபால் பொன்ராஜ் நடராஜன் சம்பத் மற்றும் திமுக கழக நிர்வாகிகளான நடராஜன் நாகராஜ் லட்சுமணன் வரதராஜன் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அந்தத் தொகுப்பை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.