• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப Mobicip நிறுவனத்தில் 12 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

ByKalamegam Viswanathan

Mar 15, 2025

கல்வி குழுமத்தின், கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Mobicip உடன் இணைந்து வேலைவாய்ப்பு இயக்கம் (Placement Drive) நடைபெற்றது. இந்த நிகழ்வில் 12 மாணவர்கள் Mobicip நிறுவனத்திலிருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக வேலைவாய்ப்பு ஆணை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. Senthilkumar தலைமையேற்று நடத்தினார். Mobicip நிறுவனத்தின் Founder & CEO திரு. Suren Ramasubbu மற்றும் Co-founder & CTO Pradeep Adhipathi ஆகியோர், நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள (HR) நிபுணர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்றனர்

பள்ளியின் மாணவர்களுக்கு சர்வதேச வேலை வாய்ப்பு!
இந்த Placement Drive மூலம், பள்ளி மாணவர்களே நேரடியாக அமெரிக்கா தலைமையிடமாக கொண்ட Mobicip நிறுவனத்தால் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

இவ்வமைப்பின் மூலம் மாணவர்களுக்கு Software Development, Artificial Intelligence (AI), Web Development, App Development, Tech Support போன்ற துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அமேரிக்காவில் இயங்கும் Mobicip நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.

நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்கி Mobicip நிறுவனத்தின் நிர்வாகம்,
“இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தின் மூலம் திறமைமிக்க மாணவர்களை அடையாளம் காண முடிந்தது. சர்வதேச தரத்தில் தொழில்நுட்ப கல்வியை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை, இளம் தலைமுறையினருக்கு வழங்க Kalvi குழுமம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது” என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்துகல்வி குழுமத்தின் தலைவர் – செந்தில்குமார் கூறுகையில்
“கல்வியின் தரத்தை உலகளாவியத்துக்கு உயர்த்தும் வகையில், நாங்கள் பல சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்க பாடுபட்டு வருகிறோம். Mobicip நிறுவனத்துடன் இணைந்து இந்த Placement Drive நடத்தியதற்கு பெருமைப்படுகிறோம். இது மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு புதிய வரலாற்று மைல்கல்!” என்று தெரிவித்தார்.