• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

விரைவில் 12 மணி நேர வேலை திட்டம் அமல்

Byவிஷா

Jan 31, 2024

நாடாளுமன்ற பட்ஜெட்டுக்குப் பிறகு நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திட்டம் அமலாகலாம் எனவும், இதனால் வாரத்தில் 2 நாள் விடுமுறைக்குப் பதிலாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக அரசு பரிசீலித்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு உங்கள் அலுவலக வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் சம்பளம் மாறலாம். உங்கள் அலுவலக வேலை நேரம் 12 மணிநேரம் வரை இருக்கலாம் ஆனால் வாரத்தில் 2 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
ஜூலை 1 முதல், வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் பிறகு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். அதாவது ஊழியர்களுக்கு வார விடுமுறையாக 3 நாட்கள் கிடைக்கும். புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க முடியும். ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். புதிய சட்டங்கள், கூடுதல் நேரத்தின் ஓவர்டைம் மணிநேரம் 50 என்பதில் இருந்து (தொழிற்சாலை சட்டத்தின் கீழ்) 125 மணிநேரமாக அதிகரிக்கும். சம்பளம் குறையும் ஆனால் பிஎஃப் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.