• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து

Byவிஷா

Nov 21, 2024

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமீப காலமாக சென்னை விமானநிலையத்தில் திடீர் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றும் ஒரே நாளில் சென்னையில் இருந்து புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 விமானங்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 6 விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை சேர்ந்தவை. நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.