• Sat. Feb 15th, 2025

மறைந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா

ByKalamegam Viswanathan

Jan 17, 2025

சோழவந்தான் பகுதியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் கருப்பட்டி தேனுர் காடுப்பட்டி ஆகிய பகுதிகளில் இபிஎஸ் ஓபிஎஸ் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் இபிஎஸ் அணி சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர். இதில் நிர்வாகிகள் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம். கே. முருகேசன், பேரூர் செயலாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, சேது கண்ணன், தியாகு அண்ணா, தொழிற்சங்க சக்திவேல், எஸ். ஆ.ர் மணி, தென்கரை முருகன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் கேபிள் மணி, அப்பாச்சி கண்ணன், பத்தாவது வார்டு மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சோலை கண்ணன், மகளிர் அணி சாந்தி, டெய்லர் பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒபிஎஸ் அணி சார்பில் கருப்பட்டியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு விவசாய அணி மாவட்ட செயலாளர் கருப்பட்டி செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் பரஞ்ஜோதி வீரமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் காடு பட்டி ஏடி காலனியில் முனைவர் பாலு தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனூரில் பாஸ்கரன் கொடிமங்கலத்தில் கருப்பனன் ஆகியோர் எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதேபோல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் திரு உருவ படங்களை வைத்து கட்சியினர் மற்றும் எம்ஜிஆரின் அபிமானிகள் எம்ஜிஆரின் படத்தை வைத்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.