சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட துவக்க விழா மற்றும் 108 கோ பூஜை மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விடுத்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் 57 வல்லுனர்களுக்கு விருது வழங்கி கொளரவித்தார். முன்னதாக சேவுகமூர்த்தி அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து வீரமங்கை ராணி வேலு நாச்சியர் திருவுருவ படத்தை திறந்து வைத்து, பசுகளுக்கு அகத்தி கீரையினை வழங்கினார். பின்னர் கோ பூஜை விழாவில் கலந்து கொண்டு, ஜல்லிகட்டு நாட்டு இன காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பை பச்சை நிற துண்டை சுழற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் பாரம்பரிய விவசாய பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து விழா மேடையில் பேசும் போது, தமிழக பூமி ஒரு ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி என்றவர், பெஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாக்கிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன்
“சிந்தூரின் ” மூலம் தவிடு பொடியாக்கினோம்.

அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதை செலுத்துவோம் என்றும், நமது நாட்டை, ஆன்மாவை கட்டி காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பது போல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும் என்பதும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பது தான் நமது தான் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்பாடு என்றவர், மேற்கத்திய நாடுகளின் மாதிரி என்பது ஒரு பேராசை கொண்ட சுரண்டல் மாதிரி, ஆனால், நாம் வளரும் போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது.
இதுதான் பாரத மாதிரி என்ற ஆளுநர், கடந்த 11 1/2 ஆண்டுகளில் நாம்
4வது பொருளாதராக நாடாக வளர்ந்துள்ளோம் என ஆளுநர் ரவி பேசினார்.