• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மானாமதுரையில் 104வயது சிலம்பம் ஆசிரியர் மரணம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 104 வயதிலும் சிலம்பம் சொல்லிக் கொடுத்து வந்த சிலம்ப ஆசிரியர் சீனி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மாணவர்கள் கவலைக்குள்ளாகினர் .

மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவை சேர்ந்தவர் சீனி , இவருக்கு தற்போது 104 வயது ஆகிறது . இவரது சிறுவயது காலத்திலிருந்தே சிலம்பத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் சிலம்பம் பயின்று ஏராளமானவர்களுக்கு சிலம்பக் கலையை கற்று கொடுத்து வந்தார் . இவரிடம் சிலம்பம் பயின்ற பலர் சினிமா துறையிலும் மற்றும் போலீஸ் , ராணுவத்திலும் சேர்ந்து சிலம்ப கலையில் ஜொலித்து வருகின்றனர் .

இந்நிலையில் தற்போது இந்த 104 வயதிலும் மானாமதுரை பகுதியில் வீர விதை சிலம்பாட்ட கழக கௌரவத் தலைவராக இருக்கும் சீனி இன்றைய தலைமுறையினருக்கும் சிலம்பக் கலையை கற்று கொடுத்து வந்தார் . இந்த வயதிலும் இளமையாக இருக்க சிலம்பப் பயிற்சி ஒன்றே காரணம் என்று தனது மாணவர்களிடம் சொல்லி வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார் .

இதைத்தொடர்ந்து அவரிடம் சிலம்பம் பயின்ற ஏராளமான மாணவர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி செலுத்தினர் நேற்று இரவில் அவரது வீட்டில் இருந்து நடந்த அவரது இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் அவரது உடல் வரும் வாகனத்தின் முன்னால் சிலம்பம் கற்ற இளைஞர்கள்,சிறுவர்கள் சிலம்பம் சுற்றி வந்து அவருக்கு மரியாதை செய்தனர்