• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா மலர் தூவி மரியாதை

Byமதி

Dec 5, 2021

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தொண்டர்களும், அதிமுகவினரும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுவோம், கரம் கோர்ப்போம் என்று அந்த சூளுரையில் தெரிவித்தார்.